உடற் சூடும், கோடைகாலமும் | கவனிக்க வேண்டியவை
வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் உடல் நிலையும், குணமும் மாறுபடுவது போல், காலத்திற்கு ஏற்றவாறு உடல்நிலை, மனம் மாறுபடும். கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள். தடுப்பு முறைகள்: கொப்பளம், பரு அம்மை ...




