கை கால்களை பராமரிப்பதன் அவசியம் என்ன?
அழகு பராமரிப்பு என்று வரும் போது முகத்திற்கு தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன?
அதிலும் தற்போது அடிக்கும் வெயிலில் சிறிது நேரம் நடத்தாலே சரும நிறம் மாற ஆரம்பிக்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே உங்கள் அழகு மேம்பட வேண்டுமானால் கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அவற்றை தினமும் பின்பற்றி வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறம் விரைவில் மறையும்
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கி பொலிவு பெறும்.
தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.
இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் விரைவில் கருமை நிறம் நீங்கும்.
எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வெளுக்கும் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.
தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டது. இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும், தயிரை கை, கால்களுக்கு தினமும் தடவி வர, சரும வறட்சியும் நீங்கும்.
தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கை, கால்களின் நிறத்தை அதிகரிக்கலாம்.

Comments
Post a Comment