புற்றுநோய்க்கான மிகப்பிரதான வாழ்க்கை முறைத் தவறுகள்
கட்டுப்பாடற்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கவழக்கம் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்ந்து உடலிற் சேர்வதனால் ஏற்படும் கலப் பிறழ்வுகள்.
ஒழுங்குமுறை தவறிய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்கள் அதி தீவிர மன அழுத்தம் உளச்சோர்வு தொடர்ச்சியாக உடலை பாதிப்புக்குள்ளாக்கும் சந்தர்ப்பங்கள்.
கிருமி நாசனி, களை கொல்லி பயன்பாடுகள் அதிகமுள்ள இடங்களில் வசித்தல், அல்லது பயன்படுத்துதல் மற்றும் காய் கறிகள் பழவகைகளை நன்கு கழுவிப்பயன்படுத்தாது உண்ணுதல், சமைத்தல்.
கடும் நெருக்கீடு மற்றும் நேரமுகாமைத்துவமின்மை காரணமாக, உணவு உட்கொள்ளும் நேரம் தவறுதல் போன்றவற்றால் ஏற்படுகின்ற அஜீரணம், மற்றும் சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான குணமடையாத (அல்சர்) குடற்புண்கள்.
தொடர்ச்சியான செல்போன் பயன்பாடு மற்றும் கதிரியக்கம் சார் பிரதேசங்கள் அல்லது கதிர்ப்பிரயோகத் தொழில்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்கள்.
உடற்பயிற்சி மற்றும் உடல் எடை பற்றிய கவனமில்லாது தொடர்ச்சியான அசைவியக்கமற்ற வாழ்க்கை முறையானது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மந்த நிலையை ஏற்படுத்துவதுடன் உடலில் இரசாயன என்சைம்கள் ஹர்மோன்களின் விருத்தியையும் முடக்கிப்போடுதல்.
ஒரு மனிதனுக்கு வேண்டிய சராசரி தூக்கமாக ஏழு தொடக்கம் எட்டு மணித்தியாலங்கள் தூக்கமில்லாத நிலைகள் உடலின் சமச்சீரான இயக்க நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்.
புகைப்பிடித்தல், நிச்சயமாக புற்றுநோயை விளைவிக்கின்ற ஓர் அதீத தீய பழக்கவழக்கமாகும். பெரும்பாலும் வாய், சுவாசப்பாதை மற்றும் நுரையீரற் புற்றுநோயை தோற்றுவிப்பதாக அமைந்தாலும், புகைப்பிடித்தலால் ஒப்பீட்டளவில் மாரடைப்பு ஏற்படுவதே அதிகமாகும்.
எனவே புற்றுநோய் வருமுன் காத்தலுக்கு நிச்சயமான உங்கள் பழக்கவழக்கங்களை சீர்ப்படுத்திக்கொள்ளல் மிக்க அவசியமாகின்றது.

